கபாலியின் முதல் வார பிரம்மாண்ட வசூல் கருத்துக்கணிப்பு

உலகமெங்கும் தற்போது கபாலி பீவர் பரவுகிறது என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிமிடத்திற்கு நிமிடம் எகிற வைக்கிறது.
சூப்பர் ஸ்டாரின் லுக், டீசர் என அனைத்தும் ரசிகர்களிடயே நல்ல ஒரு வரவேற்பினை பெற்றுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது. படத்திற்கான டிக்கெட் வெளிவந்த சில நிமிடங்களிலே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.


இந்நிலையில் படத்தின் மீதான் வசூல் கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் சுமார் 65 முதல் 70 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் மூன்று நாட்களில் மட்டும் சுமார் 160 கோடி வரை வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் புது சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

No comments:

Post a Comment