பைரவா ஆட்டம் ஆரம்பம்

பரதன் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகும் ‘தளபதி 60’ படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. விஜய் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த படத்தின் போஸ்டர் வெளியானது அவர்களை மகிழ்ச்சியின் உச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல பகுதிகளில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வருகின்றனர் விஜய் ரசிகர்கள். இன்று இந்திய அளவில் ட்விட்டர் பக்கத்தில் பைரவன் என்ற பெயரை ட்ரெண்ட் செய்துவிட்டனர் விஜய் ரசிகர்கள்.

அது மட்டுமல்லாமல் திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கில் இன்று ஸ்பெஷல் ஷோவாக ராம் திரையரங்கில் தெறி திரையிடப்பட்டது. மேலும் அந்த திரையரங்கில் பர்ஸ்ட் லுக்கும் வெளியிடப்பட்டது.


Source: Cinebilla Kollywood News

No comments:

Post a Comment