வில்லனுக்கே வில்லன்டா.... ”மங்காத்தா”டா....!!

அஜித்திற்கும், அஜித் ரசிகர்களுக்கும் இன்றைய தினம் ஒரு மறக்க முடியாத நாளாக நிச்சயம் இருக்கும். அஜித் என்ற ஒரு நடிகனை உலகம் முழுவதும் திரும்பி பார்க்க வைத்த நாள். ஐந்து வருடத்திற்கு முன்பு இதே நாளில் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிக்க  வெளியானது ‘மங்காத்தா’.

 மங்காத்தா தான் ’தல’ அஜித்தின் 50 வது படமாகும். பெரிய பெரிய ஜாம்பவான்களின் 50வது, 100வது படங்கள் அவர்களது காலை வாரி விட்டிருக்கின்றன. அதில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி என அனைவரும் சிக்கியிருக்கிறார்கள். விஜயகாந்தை தவிர. விஜயகாந்தின் 100 வது படமாக வெளிவந்தது ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் வாழ்க்கையில் இது ஒரு மைல்ஸ்டோன் படமாக அமைந்தது.
அந்த வகையில் அஜித் நடிக்க, வெங்கட் பிரபு இயக்க, யுவனின் இசையில் வெளிவந்தது இந்த மங்காத்தா. அதற்கு முன்புவரை சூப்பர் ஸ்டார்களின் படங்கள் மட்டுமே 300-400 திரையரங்குகளில் வெளியாகும். முதல் முறையாக அஜித்தின் ‘மங்காத்தா’ மிக அதிகமான திரையரங்குகளில் வெளியாகி புதிய சாதனை நிகழ்த்தியது.

மிகவும் தைரியமாக இந்த நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்று அதில் வெற்றியும் கண்டார். இன்றும் ரசிகர்களின் உரையாடலில் சாதரண வார்த்தையாக வலம் வந்து கொண்டிருக்கிறது இந்த படத்தில் இவர் பேசிய வசனங்கள்.

Week End வசூலில் மங்காத்தா தான் புதிய வசூல் சாதனை நிகழ்த்தியது. 4 முதல் 5 கோடி வரை வசூலை அள்ளி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த படத்தில் அஜித்திற்கு வில்லனான ஒரு கதாபாத்திரம் என்றாலும், ஸ்டைல், லுக், இசை, சால்ட் அண்ட் பெப்பர் என அனைத்தும் படத்திற்கு பெரிய பலமாக அமைந்து விட்டது.

வெங்கட் பிரபு அஜித்தின் மிகப் பெரிய ரசிகர் என்பதால் ஒவ்வொரு காட்சியையும் ஒரு ரசிகனாக இருந்து செதுக்கி எடுத்தார். இன்றுடன் மங்காத்தா வெளிவந்து 5 வருடங்கள் ஆகியுள்ளதால் தல ரசிகர்கள் மிக உற்சாகமாக அதை கொண்டாடி வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் விருப்பப்பட்டால், தல ஓகே சொன்னால் நிச்சயமாக ‘மங்காத்தா-2’ இயக்க நான் தயாராக உள்ளேன் என இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். ‘தல’ தலையசைப்பாரா..?? 


Source: Cinebilla Kollywood News

No comments:

Post a Comment