நயனுக்கு ‘நோ’ சொன்ன அஜித்

அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘ஏகே 57’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில் நயன்தாராவின் நண்பரும்  இயக்குனருமான விக்னேஷ் சிவன் அஜித்திற்காக ஒரு கதை ஒன்றை தயார் செய்து வைத்துள்ளாராம். அந்த கதையில் அஜித்தை நடிக்க வைக்க பல வழிகளில் ஆட்களை அனுப்பி வைத்துப் பார்த்தார் நயன். ஆனால், அஜித்தின் காதினை கூட அந்த தகவல் எட்டவில்லை.

கடைசியாக நயன்தாராவே களத்தில் இறங்கினார். அஜித்திடம் நேராக சென்று பேசியுள்ளார். கடைசியாக யார் இயக்குனர் என்று அஜித் கேட்க விக்னேஷ் சிவன் என்று கூறியிருக்கிறார். 

’என்னை அறிமுகப்படுத்திய எஸ் ஜே சூர்யா, முருகதாஸ் ஆகியோர் கால்ஷீட் கேட்டும் நான் இன்னும் கொடுக்கவில்லை. இரண்டு படங்களை இயக்கிய இவரது இயக்கத்தில் நான் எப்படி நடிப்பேன்” என கூற அந்த இடத்தில் இருந்து ஜகா வாங்கியுள்ளார் நயன். பிறகு தான் கதை சூர்யாவிடம் சென்றிருக்கிறது. 

Source- Cinebilla Kollywood News

1 comment:

  1. One of the top glass design work held in art gallery expo. Our Boom Lift Rental Equipment access to product art in height work. We also serviced for aluminium scaffolding rental process to help man access any service in height design. We Sendhamarai Engineering Our quick service also in aluminium scaffolding rental in Coimbatore

    ReplyDelete